காவல்துறை அதிகாரிகளுக்காக நிர்மாணிக்கப்படும் வீட்டுத்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!
#SriLanka
#Project
#House
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Cabinet
Thamilini
1 day ago
இலங்கை காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்காக கொழும்பு 13 இல் உள்ள ‘ஹார்பர் வியூ ரெசிடென்சிஸ்’ திட்டத்தில் 350 வீட்டு அலகுகளை வாங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொழும்பு 13, சிரில் சி. பெரேரா மாவத்தையில் அமைந்துள்ள இந்த வீட்டுத் திட்டம், 14 தளங்களில் 452 அலகுகளைக் கொண்டுள்ளது.
அரசு மற்றும் அரை அரசு நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”