வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை - தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

#SriLanka #Hospital #strike #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 days ago
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை - தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) சிறப்பு மத்திய குழு கூட்டம் நாளை (07) நடைபெற உள்ளது.

சுகாதாரத் துறையைப் பாதிக்கும் பிரச்சினைகளில் அரசாங்கம் தலையிட்டு தீர்வு காணத் தவறியதற்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சகம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்று GMOA ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க குற்றம் சாட்டியுள்ளார். 

அதன்படி, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து பரிசீலிக்க சங்கம் முடிவு செய்துள்ளதாகவும், நாளை நடைபெறும் சிறப்பு மத்திய குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!