அனுராதபுரத்தில் வீட்டிற்கு தீவைத்த நபர் - தந்தை, மகள் உடல் கருகி பலி!

#SriLanka #Accident #Anuradapura #fire #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 days ago
அனுராதபுரத்தில் வீட்டிற்கு தீவைத்த நபர் - தந்தை, மகள் உடல் கருகி பலி!

அனுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மற்றும் அவரது மகள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நான்கு குடும்ப உறுப்பினர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 குடும்ப தகராறில் தந்தை பெட்ரோல் ஊற்றி தனது சொந்த வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது, இதன் விளைவாக மேற்படி இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் கலேன்பிந்துனுவெவ காவல் பிரிவுக்குட்பட்ட நுவரகம் காலனியின் படிகாரமடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவத்தில், 43 வயதான தந்தையும், அவரது 13 வயது மகளும் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும்  குறித்த நபரின் 36 வயதுடைய  மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயதுடைய மாமியார் ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 பொலிஸாரின் முதற்கட்ட  விசாரணையில், அந்த நபர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும், அவர் தனது மனைவியை அடிக்கடி தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸாரிடம் பலமுறை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!