பெற்றோல் விலை அதிகரிப்பு: நள்ளிரவுமுதல் அமுலில்

#SriLanka #petrol
Mayoorikka
2 days ago
பெற்றோல் விலை அதிகரிப்பு: நள்ளிரவுமுதல் அமுலில்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 335 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும். இதேவேளை 277 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 279 ரூபாவாகும்.

 இதேவேளை,318 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 323 ரூபாவாகும்.

 மேலும், மண்ணெண்ணெய் 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 182 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளபடாது 294 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!