வெளிநாட்டு பணவனுப்பல்கள் மூலம் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பணவனுப்பல்கள் மூலம் 7 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானமும், சுற்றுலாத்துறை மூலம் 3.2 பில்லியன் டொலர் வருமானமும் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (05) காலை வௌிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
மேலும், டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து இதுவரை நன்கொடையாக சுமார் 85 பில்லியன் ரூபாய் பணம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது குறிப்பிட்டார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”