சீஷெல்ஸ் அரசாங்கத்தால் எரியூட்டப்பட்ட கப்பல் தொடர்பில் தீவிர விசாரணை!
சீஷெல்ஸ் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு எறியூட்டப்பட்ட கப்பல் தொடர்பில் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் தற்போது விசாரித்து வருவதாகவும், மேலும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
டிசம்பர் 7 ஆம் திகதி வென்னப்புவவில் உள்ள வெல்லமங்கரே மீன்வளத் துறைமுகத்தில் இருந்து 6 மீனவர்களுடன் புறப்பட்ட இஷானி-1 என்ற கப்பல் டிசம்பர் 30 ஆம் திகதி சீஷெல்ஸ் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு தீ வைத்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்புப் படையினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை கவனத்தில் கொண்டதாகவும், நாட்டில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தின் தொடர்புடைய அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் துணை அமைச்சர் கூறினார்.
அதன்படி, தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், கப்பலில் உள்ள இலங்கை மீனவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் தெரிவித்தார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”