வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு - ஜே.வி.பி கண்டனம்!
அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பையும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதையும், ஜேவிபி கடுமையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பில் ஜே.வி.பி இன்று வெளியிட்ட அறிக்கையில், வேறு எந்த சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட அரசைப் போலவே, நாட்டின் எதிர்காலத்தையும் தலைவர்களையும் தீர்மானிக்கும் உரிமை வெனிசுலா மக்களிடமே உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
"சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தக் கொள்கையை மீற உரிமை இல்லை" என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
"நவீன சமூகமும் ஆட்சியும் நாகரிகமாக இருக்க வேண்டும். ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நாடுகளின் இறையாண்மை ஆகியவை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள். இந்தக் கொள்கைகளை மீறி இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் படையெடுப்புகளை நியாயப்படுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த வகையில், அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெனிசுலாவுக்கு எதிரான பலவந்தமான இராணுவ ஆக்கிரமிப்பை யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”