கல்கிஸ்ஸை நகராட்சியின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மீது தாக்குதல்!
தெஹிவளை-கல்கிஸ்ஸை நகராட்சி மன்றத்தின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் உட்பட மூன்று பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் குறித்த NPP உறுப்பினரின் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்த நிலையில், குறித்த முயற்சி தோல்வியில் முடியவே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கிரிகோரிஸ் சாலையில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தெஹிவளை-கல்கிஸ்ஸை நகராட்சி மன்ற உறுப்பினர் யாளினி ராஜேந்திரனின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளதாகவும், கவுன்சிலர் மற்றும் அவருடைய மகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காயமடைந்தவர்கள் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”