50 வருடங்களின் பின் அல்லைபிப்ட்டி, அலுமினியம் தொழிற்சாலை வீதி புனரமைப்பு!
ஜனாதிபதி "அனுர" தலைமையிலான அரசின் 1000 கிராகிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் வேலணை பிரதேசத்தின் அல்லைபிப்ட்டி, அலுமினியம் தொழிற்சாலை வீதியை, காப்பெற் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் இன்று (03) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மக்களின் அவசிய தேவை கருதி தேசிய மக்கள் சக்தியின் வேலணை பிரதேச சபை உறுப்பினரான ஆனந்தராசா சதீஸ்குமாரின் திட்ட முன்மொழிவுடன், தெரிவு செய்யப்பட்ட குறித்த வீதியின் அபிவிருத்திக்கான ஆரம்ப பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆரம்பித்து வைத்தார்.
குறித்த 1000 கிராகிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் முதற் கட்டமாக வடக்கில் 25 வீதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், வேலணை பிரதேசத்தில் 30.7 மில்லியன் நிதிச் செலவில் 1.3 கிலோ மீற்றர் தூரம் கொண்ட குறித்த வீதியானது "காப்பெற்" மற்றும் கொங்கிறீற் ஆகிய இரு வகைகளிலும் குறித்த பகுதியின் நீரோட்டத்துக்கு இயைவாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அலுமினியம் தொழிற்சாலை வீதி, 50 வருடங்களின் பின், குறிப்பாக வீதி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து நிரந்தர அபிவுருத்தியை காணாதிருந்த குறித்த வீதி இன்று அதன் எதிர்பார்ப்பை எட்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதனிடையே குறித்த பகுதியில் இருக்கும் மற்றொரு அவசிய வீதியான மண்டைதீவு இணைப்பு வீதியையும் அபிவிருத்தி செய்து தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மக்களின் கோரிக்கையின் நியாயம் கருதி குறித்த வீதிக்கான அபிவிருத்தி விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் அதற்கு முன்னர் அவ்வீதியின் பாலம் ஒன்று சுமார் 60 மில்லியன் நிதியில் கட்டமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன், குறித்த பாலம் நிறைவுற்றபின் குறுத்த வீதிக்கான நிதி பெற்றுத்தரப்படும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி அனுர கிராம கக்களின் நலன்களில் அதிக அக்கறை செலுத்தி வருவதால் உங்கள் எதிர்பாருக்கள் விரைவில் நிறைவேறும் என்றும் சுட்டிக்காட்டினார்.