தையிட்டியில் சட்டவிரோத விகாரை: மாபெரும் மக்கள் போராட்டம் ஆரம்பம்

#SriLanka #Protest #Thaiyiddi
Mayoorikka
8 hours ago
தையிட்டியில் சட்டவிரோத விகாரை: மாபெரும் மக்கள் போராட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் - தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு தெற்கிலிருந்து புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு நிறுவப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்தும் சட்டவிரோத விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாபெரும் நிலமீட்பு போராட்டமொன்று இன்று (3) தையிட்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

 போயாதினமான இன்றைய தினம் இடம்பெறும் இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆரதவு வழங்கியுள்ளதுடன் தற்போது போராட்ட களத்துக்கு படைபெடுத்துள்ளனர். 

 குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், விகாரையின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகளவான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 அதே நேரத்தில், இந்த போராட்டத்துடன் தொடர்புடையதாக குறிப்பிட்டு 32 பேருக்கு எதிராக நீதிமன்றத்தால் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தையிட்டி போராட்டம் தொடர்பில் நீதிமன்றத்தல் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால கட்டளை நாளை 4ம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 இருப்பினும் தடைகளை மீறி பொதுமக்கள் தமது காணி உரிமைக்காக போராட்ட களத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள். பொலிசாரும் போராட்டத்தை அடக்குவதற்காக நீர்தாரை வாகனம், மற்றும் கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஆயத்த நிலையில் இருக்கிறார்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!