இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் மீனவர்களின் பிரச்சனைகளை முன்வைக்காத தமிழ்க்கட்சிகள்!
இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்த போது இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக பேசவில்லை.
மாறாக காட்டிக்கொடுக்கும் வேலையை மட்டும் செய்துள்ளனர் என்று கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை என்பது பாரிய பிரச்சனையாகவுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வடபகுதி மீனவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மாறாக தமிழ்க்கட்சிகள் இவர் இவருடைய ஆள் போன்ற காட்டிக்கொடுப்பு விடயங்களையே பேசினார்கள். அரசாங்கம் என்ற ரீதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அதற்கான ராிதந்திர பேச்சுவார்த்தைகள் விரைவில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.