லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்!
#SriLanka
Mayoorikka
1 hour ago
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்த முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் பதிவான தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலைகள் தொடர்ச்சியாக பல மாதங்களாக மாறாமல் உள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை முதல் ஒக்டோபர் 2025 வரை எந்த விலை திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், அண்மைய விலை திருத்தம் (அதிகரிப்பு) ஜூலை 2025க்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.
இதற்கிடையில், லாஃப் எரிவாயு நிறுவனம், நேற்று (01) முதல் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாக அறிவித்தது.
இந்நிலையில் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்த முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.