வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்து: இளைஞன் உயிரிழப்பு
#SriLanka
Mayoorikka
3 hours ago
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள புன்னையடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (01) இரவு இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் ஈச்சிலம்பற்று -முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஜமனராஜ் ஜதுர்ஷன் என தெரியவருகிறது.
அதிவேகம் காரணமாக மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .