இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டில் கிண்ணியா காவல்துறை அதிகாரி ஒருவர் கைது!
#SriLanka
#Trincomalee
#Arrest
#ADDA
#Kinniya
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
கிண்ணியா காவல் நிலையத்தைச் சேர்ந்த துணை ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியாவைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
முறைப்பாட்டாளர் தாக்குதல் தொடர்பில் அளித்த முறைப்பாட்டிற்கு 10,000 லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிண்ணியா காவல் நிலையத்திற்குள் நேற்று (31) மாலை 5:20 மணியளவில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் அதிகாரிகளால் துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.