அரச நிறுவனங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து வெளியான தகவல்!

#SriLanka #Investigation #Threat #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
அரச நிறுவனங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து வெளியான தகவல்!

பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு வந்த போலி குண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தும் அதே வேளையில், விசாரணைகள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார்.

கண்டி மாவட்ட செயலகம், பூஜாபிட்டிய, நாவலப்பிட்டி மற்றும் பஸ்பேஜ் கோப்ரலே பிரதேச செயலகங்கள் மற்றும் கத்தார் ஏர்வேஸ் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த மின்னஞ்சல்கள் வந்திருந்தது. 

இது தொடர்பில்  வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் முயற்சியாக சந்தேகிக்கப்படும் சம்பவம் குறித்து காவல்துறை சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். 

 இந்த மின்னஞ்சல்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததாக காவல்துறையினரால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,   காவல்துறையினர் இது குறித்து தனக்குத் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!