கல்லுமலையும்,வெடுக்குநாறியும் எங்கள் சொத்து! வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்

#SriLanka
Mayoorikka
3 hours ago
கல்லுமலையும்,வெடுக்குநாறியும் எங்கள் சொத்து! வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடகிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 ஒரு மதகுரு என்று கூட பாராமல் மோசமான முறையில் வேலன் சுவாமி நடாத்தப்பட்டிருந்தார். இது தமிழ்மக்கள் மீதானஒரு அடக்குமுறை செயற்பாடாகவே உள்ளது.

 வடக்கில் குருந்தூர்மலை,வெடுக்குநாறிமலை,தையிட்டி,தற்போது வவுனியா கல்லுமலை என்பன ஆக்கிரமிப்பு செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பௌத்த துறவிகளே இப்படியான கலவரங்கள் ஏற்ப்படுவதற்கு தூண்டுகோலாக உள்ளனர். 

எனவே மறுக்கப்படும் எமது உரிமைகளை அடைவதற்காக நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை செய்வோம். என்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!