06 அமைச்சர்களின் சொத்து விபரங்களை தூசி தட்டும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!
#SriLanka
#Minister
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
6 அமைச்சர்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத சொத்துக்கள் குறித்து விரிவான விசாரணையை தொடங்க இஞ்சம் ஊழல் பற்றிய புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்க, குமார ஜெயக்கொடி, சுனில் ஹந்துன்னெத்தி, நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கு எதிராகவே மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு ஜமுனி கமந்த துஷார நாளை செவ்வாய்க்கிழமை (30) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜராகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.