டக்ளஸ் தேவானந்தாவிற்கு உயிராபத்து: பாதுகாப்பை வழங்க கோரிக்கை

#SriLanka #Douglas Devananda
Mayoorikka
1 hour ago
டக்ளஸ் தேவானந்தாவிற்கு உயிராபத்து: பாதுகாப்பை வழங்க கோரிக்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னர் பல தடவைகள் எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

 இன்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொழுது முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும், அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

 தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டாட்சிகளில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்பொழுது மகர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

 ஆனால் அங்கு ஆயிரம் கைதிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டிய போதும் மூவாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. 

 ஆகவே டக்ளஸ் தேவானந்தா முன்னர் பல தடவைகள் எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!