கண்டி மாவட்ட செயலகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
#Police
#kandy
#search
#Security
#Bomb
#Threat
Prasu
1 hour ago
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல் பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இன்று விடுக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்பில், இத்தகவல் குறித்து கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இத்தகவலானது பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகவே கருதப்படுவதாகவும், இது தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கண்டி மாவட்ட செயலகத்தின் ஐந்து இடங்களில் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று செய்தி ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.
(வீடியோ இங்கே )