மத்திய மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை!
மத்திய மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உரிய அதிகாரிகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மைய சீரற்ற வானிலையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள பல பாடசாலைகள் மண்சரிவு அபாயத்திற்கு நேரடியாக முகம் கொடுத்துள்ளது.
தர மதிப்பீட்டு அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் ஹசலக பகுதியைத் தவிர வேறு எந்தப் பாடசாலைகளும் பெரிய அளவில் அபாய நிலையில் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் உள்ள 160 பாடசாலைகளை உள்ளடக்கிய விரிவான மதிப்பீட்டு அறிக்கை ஏற்கனவே கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின்படி கல்வி அமைச்சு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியாளர் ஆசிறி கருணாவர்தன கூறியுள்ளார்.