பெற்றோல் குண்டுவீச்சி தாக்குதலுக்கு திட்டம் - அறுவர் கைது!
#Police
#Attack
#Investigations
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
சீதுவையில் உள்ள இரவு விடுதியில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் ஒரு குழு கைது செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்திய சோதனையின் போது, ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து பெற்றோல் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களில் இரவு விடுதியின் மேலாளர், ஒரு தொழிலதிபர், மூன்று முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலும் விசாரணைகளைத் தொடர்கிறது.