இலங்கையில் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் வானிலையில் மாற்றம்: அதிகரிக்கும் மழை

#SriLanka #weather
Mayoorikka
3 hours ago
இலங்கையில் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் வானிலையில் மாற்றம்: அதிகரிக்கும் மழை

டிசம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் நாட்டின் ஊடாக கிழக்கு திசையிலான அலை அலையான காற்று ஓட்டம் வலுவடையவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 இதன் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என விசேட வானிலை அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

 விசேடமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் வானிலை கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!