மூன்று வாரங்களுக்குள் மதவாச்சி- தலைமன்னார் இடையே ரயில் சேவை ஆரம்பம்!
மதவாச்சி மற்றும் தலைமன்னார் இடையிலான ரயில் சேவைகளை அடுத்த மூன்று வாரங்களுக்குள் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அனர்த்தங்கள் காரணமாக ரயில் பாதையில் ஏற்பட்ட சேதங்கள் தற்போது சீர்செய்யப்பட்டு வருவதாக ரயில்வே மற்றும் பராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளம் பாதையில் சேதமடைந்த இரண்டு பாலங்களைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பணிகள் நிறைவடைந்ததும், தற்போது நாத்தாண்டியா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள் புத்தளம் வரை நீடிக்கப்படும். மலையக ரயில் பாதை அனர்த்தங்களினால் பாரிய பாதிப்புக்குள்ளானது, இதன் சீரமைப்புப் பணிகள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ரம்புக்கணை – கடுகண்ணாவை, கம்பளை – நாவலப்பிட்டி மற்றும் கொட்டகலை – அம்பேவெலை ஆகிய பகுதிகளுக்கு இடையிலான சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாத்தளை ரயில் பாதை, கண்டி மற்றும் மாத்தளை இடையிலான ரயில் பாதையில் சேதமடைந்த பகுதிகளும் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.