அனர்த்தம் காரணமாக அம்பாறையில் முடங்கிய நத்தார் வியாபாரம்!

#SriLanka #Disaster
Mayoorikka
1 hour ago
அனர்த்தம் காரணமாக அம்பாறையில் முடங்கிய நத்தார் வியாபாரம்!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரம் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

 மேலும், புயல் பாதிப்பு காரணமாக பல இடங்களில் பிரார்த்தனை மட்டும் நடத்தப்பட்டதாகவும், கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

 அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பல வர்ணங்களால் ஆன மரங்கள் காணப்பட்டதுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார மின் குமிழ்கள் நத்தார் மரங்கள் என்பன மக்களால் கொள்வனவு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

 கிறிஸ்தவ மக்களால் கொண்டாப்படும் பண்டிகையாக இருந்தாலும், அனைத்து மக்களும் தமது வீட்டினை அழகுபடுத்துவதற்காக குறித்த அலங்காரப் பொருட்களை கொள்வனவு செய்வர்.

 ஆயினும் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனைகள் மாத்திரம் இடம்பெற்றதுடன் கொண்டாட்டங்கள் பல இடங்களில் தவிர்க்கப்பட்டிரந்தன. அத்தடன் வழமை போன்று நத்தார் நள்ளிரவு திருப்பலி கல்முனை திரு இருதயநாதர் தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!