அனர்த்தத்திற்கு பின்னர் புத்துயிர் பெறும் நுவரெலியா!

#SriLanka #Tourist
Mayoorikka
5 hours ago
அனர்த்தத்திற்கு பின்னர் புத்துயிர் பெறும் நுவரெலியா!

டிட்வா சூறாவளியால் நுவரெலியாவில் ஏற்பட்ட அனர்த்தங்களிd; பின்னர் தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால் ஓரளவு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது.

 நுவரெலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பின்னர் முக்கிய சுற்றுலா பகுதியைச் சுற்றி பல புதுப்பித்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் பல்வேறு பன்முக பண்புகளை கொண்ட கிரகறி வாவியில் நாட்டில் நிலவிய மோசமான காலநிலையால் படகு சவாரி முற்றாக நிறுத்த நடவடிக்கைகள் எடுத்தனர். 

 நுவரெலியாவில் தொடர்ந்து பெய்த கன மழையால் சேதம் அடைந்தன. இதையடுத்து அந்த படகுகள் அனைத்தும் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் படகு சவாரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால் பழுதடைந்த படகுகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டதை அடுத்து 20 நாட்களுக்கு பிறகு மெதுவாக படகு சவாரி மீண்டும் தொடங்கியுள்ளனர்.

 இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்ததை காண முடிந்தது. நுவரெலியாவில் வானிலை தொடர்பான சிறு சிறு போக்குவரத்து இடையூறுகள் உள்ள போதிலும் நத்தார் பண்டிகை விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை என்பதால் நுவரெலியாவிற்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகைத்தருகின்றனர்.

 குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக நுவரெலியாவில் வெயில், சாரல் மழை,பனிப்பொழிவு ஆகிய காலநிலை நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!