டிப்பர் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: 30 பேர் காயம்

#SriLanka #Accident
Mayoorikka
5 hours ago
டிப்பர்  - பேருந்து  நேருக்கு நேர் மோதி விபத்து: 30 பேர் காயம்

திக்வெல்ல - பெலியத்த வீதியின் ஹதபாங்கொடல்ல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

 வீரக்கெட்டிய பிரதேசத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்றும் ஒன்றோடொன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

 இந்த விபத்தினால் சுமார் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!