இவ்வருடத்தில் மாத்திரம் 2,341 துப்பாக்கிகள் பறிமுதல்!
#SriLanka
#Police
#gun
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
ஜனவரி 1, 2025 முதல் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகள் மூலம் மொத்தம் 2,341 துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவற்றில் 73 T56 துப்பாக்கிகள், 59 ரிவால்வர்கள், 83 கைத்துப்பாக்கிகள் மற்றும் 2,126 பிற துப்பாக்கிகள் அடங்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், பொலிஸார் 1,793 கிலோகிராம் 139 கிராம் ஹெராயின், 3,683 கிலோகிராம் 163 கிராம் ஐஸ் மற்றும் 16,686 கிலோகிராம் 62 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 649 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
