பிரான்சின் தேசிய அஞ்சல் அலுவலகம் மீது சைபர் தாக்குதல்
#France
#Attack
#Postal
#cyber crime
Prasu
1 hour ago
பிரான்சில் தேசிய அஞ்சல் சேவையான லாப்போஸ்ட் மற்றும் அதன் வங்கி பிரிவான லா பேங்க் போஸ்டல் ஆகியவற்றின் ஆன்லைன் சேவைகள் சைபர் தாக்குதல் காரணமாக முடக்கப்பட்டன.
ஆன்லைன் சேவை முடக்கத்தால் பொருட்கள் அனுப்புவதிலும், அதனை பெறுவதிலும் தாமதமும் தடைகளும் ஏற்பட்டன.
இந்தச் சைபர் தாக்குதலால், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், இது இணையதளத்தின் சர்வர்களை முடக்கி சேவைகளைப் பயன்படுத்த முடியாதவாறு செய்யும் ஒரு வகை தாக்குதல் எனவும் அஞ்சல் துறை உறுதி செய்துள்ளது.
(வீடியோ இங்கே )