முச்சக்கரவண்டி ஒன்று லொறியுடன் மோதி விபத்து: குழந்தை உட்பட மூன்று பேர் காயம்
#SriLanka
#Accident
Mayoorikka
5 hours ago
காலி - பெரெலிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.