நைஜீரியாவில் கடந்த மாதம் கடத்திச் செல்லப்பட்ட 130 குழந்தைகள் விடுதலை
#students
#Rescue
#Kidnap
#Nigeria
Prasu
5 hours ago
நைஜீரியாவில் பயங்கரவத்திகளால் கடத்தப்பட்ட 130 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 21ம் திகதி நைஜர் மாகாணத்தில் உள்ள புனித மேரி கத்தோலிக்கப் பள்ளியில் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல், 303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.
கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே 50 மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் 100 மாணவர்கள் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது மீதமுள்ள 130 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )