உங்கள் காணியிலிருந்து நீங்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டு விட்டீர்களா? உங்கள் காணி அபகரிக்கப்பட்டதா? - சட்ட ஆலோசனை

#SriLanka #Law #land #Lawyer
Prasu
1 hour ago
உங்கள் காணியிலிருந்து நீங்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டு விட்டீர்களா? உங்கள் காணி அபகரிக்கப்பட்டதா? - சட்ட ஆலோசனை

உங்கள் காணியிலிருந்து நீங்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டு விட்டீர்களா...? உங்கள் காணி அபகரிக்கப்பட்டதா? கற்பனை செய்து பாருங்கள்.

உங்கள் சொந்தக் காணிக்கு நீங்கள் செல்லும் போது, அங்கே வேறு ஒருவர் வேலி அமைத்து, "இது என்னுடையது, வெளியே போ" என்று உங்களை மிரட்டினால் என்ன செய்வீர்கள்? இலங்கைச் சட்டத்தின் படி, "உரிமையை விட உடமை (Possession) பலமானது." 

இதனை சட்ட ரீதியாக எப்படி எதிர்கொள்வது? முதலில் பொலிஸ் நிலையத்தின் பங்கு (The Role of Police) : சம்பவம் நடந்த உடனேயே செய்ய வேண்டியது பொலிஸ் முறைப்பாடு (Police Complaint). 

குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் படி, ஒரு காணித் தகராறு "சமாதானக் குலைவை" (Breach of Peace) ஏற்படுத்தும் என்றால், அந்த விடயத்தில் பொலிஸ் தலையிட வேண்டும்.

நீங்கள் என்ன சொல்ல வேண்டும்? "நான் அமைதியாக குடியிருந்த/பயன்படுத்திய காணியில், அத்துமீறி நுழைந்து, பலவந்தமாக என்னை வெளியேற்றிவிட்டார்கள்" என்று உங்கள் முறைப்பாட்டை பதிவு செய்ய வேண்டும். 

இது குடியியல் சார்ந்த தகராறு (Civil Dispute) என்றாலும், இதனால் கைகலப்பு அல்லது சமாதானக் குலைவு இருக்கும் வாய்ப்பு உள்ளதால், பொலிஸ் இதனை நீதவான் நீதிமன்றத்திற்கு (Magistrate Court) வழக்காக பாரப்படுத்தல் வேண்டும். 

மிக முக்கியமான சட்டம் : பிரிவு 66 வழக்கு (Section 66 Application)இதுதான் உங்களை காப்பாற்றும் சட்டப் பிரிவு! 

ஆரம்ப நீதிமன்ற நடவடிக்கை முறைச் சட்டம், இல. 44, 1979 (Primary Courts Procedure Act No. 44 of 1979). குறிப்பாக, இதன் 66வது பிரிவு (Section 66) காணி சம்பந்தமான தகராறுகளுக்கான உடனடித் தீர்வை வழங்குகிறது.

இதன் சிறப்பம்சங்கள் என்ன?

உரிமை முக்கியமல்ல: இந்த வழக்கில் நீதவான் "காணிக்கு சொந்தக்காரர் யார்?" (Title) என்று பார்க்க மாட்டார். "கடைசியாக யார் உடமையில் காணி இருந்தது?" (Possession) என்பதை மட்டுமே பார்ப்பார்.

இது ஒரு சுருக்கமான விசாரணை (Summary Inquiry). வருடக்கணக்கில் இழுத்தடிக்காமல் விரைவாக தீர்வு கிடைக்கும்.

காலக்கெடு (The Golden Rule):

சம்பவம் நடந்து அல்லது பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு உடனடியாக ஆக்குறைந்த தாமதத்துடன் விசாரணை செய்து அடுத்து வரும் தினத்தில் நியாயாதிக்கம் உள்ள ஆரம்ப நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து விசாரணைக்கு வரவேண்டும்.

நீங்கள் 2 மாதங்களுக்குள் வெளியேற்றப்பட்டவர் என நிரூபித்தால், ஆரம்ப நீதிமன்றம் உடனடியாக காணியை மீண்டும் உங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடும்.

இடைக்காலத் தடையுத்தரவு (Interim Order) வழக்கு முடியும் வரை அந்த நபர் காணியில் வீடுகட்டுவதையோ, மரங்களை வெட்டுவதையோ அல்லது சொத்தின் தன்மையை மாற்றுவதையோ தடுக்க, பிரிவு 66 இன் கீழ் இடைக்காலக் கட்டளை ஒன்றை நீதிமன்றம் பிறப்பிக்க முடியும்.

மாவட்ட நீதிமன்றம் மூலம் "உரிமை கோரும் வழக்கு" (Rei Vindicatio Action) - Rei vindicatio is a Roman law-based action (real right of action) allowing an owner to recover possession of their movable or immovable property from anyone holding it without consent. The owner must prove ownership and that the property is identifiable.

ஒருவேளை 66 பிரிவின் கீழ் தீர்வு கிடைக்காவிட்டால், அல்லது காலக்கெடு முடிந்துவிட்டால், நீங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் (District Court) காணிக்கான உரிமை கோரும் வழக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இது காணியின் உறுதி (Deed), வரைபடம் (Plan) மற்றும் மூல ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் முழுமையான குடியியல் சட்டத்தின் கீழான வழக்கு ஆகும்.

ஏன் அவசரப்பட வேண்டும்? 

"காலவரையறைச் சட்டம்" (Prescription Ordinance) : இலங்கையில் "காலவரையறைச் சட்டம்" (Prescription Ordinance) என்ற ஒன்று உள்ளது.

ஒரு நபர் உங்கள் காணியில் நுழைந்து, 10 வருடங்களுக்கு மேலாக உங்களுக்குத் தெரியப்படுத்தியவாறு, எவ்வித எதிர்ப்புமின்றி தடைகள் இடையூறுகள் இன்றி அதனைத் தனது சொந்தக் காணி போல அனுபவித்தால், அவர் அக்காணிக்கு சட்டப்படி உரிமையாளராகிவிடுவார்!

சுருக்கமாக நீங்கள் செய்ய வேண்டியவை:

  • உடனடியாக பொலிஸ் முறைப்பாடு செய்யுங்கள். (Copy ஒன்றை பத்திரப்படுத்துங்கள்).
  • சம்பவம் நடந்து 2 மாதங்களுக்குள் சட்டத்தரணி மூலம் அல்லது பொலிஸ் மூலம் நீதவான் நீதிமன்றத்தில் பிரிவு 66 இன் கீழ் நடவடிக்கை எடுங்கள்.
  • எந்தக் காரணத்தைக் கொண்டும் எதிர்தரப்பினர் காணியில் நிரந்தரக் கட்டடங்கள் கட்ட அனுமதிக்காதீர்கள்.
  • நண்பர்களே! காணி என்பது வெறும் மண் அல்ல, அது உங்கள் உழைப்பு. இந்தச் சட்டம் தெரியாததால் பல ஏழைகள் தங்கள் நிலத்தை இழந்துள்ளார்கள். இந்தத் தகவலை SHARE செய்வதன் மூலம், ஒருவரின் சொத்து பறிபோவதை நீங்கள் தடுக்கலாம்! 

சட்டத்தரணி 

குமாரசிங்கம் கம்ஷன்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!