12 முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன!
12 முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றம் குறைந்து வருவதாக இலங்கை மகாவலி அதிகாரசபையின் நீர் மேலாண்மை செயலகத்தின் இயக்குநர் பொறியாளர் நிலந்த தனபால உறுதிப்படுத்தியுள்ளார்.
மகாவலி அதிகாரசபை சுமார் 20 முக்கிய நீர்த்தேக்கங்களை நிர்வகிப்பதாகவும், அவற்றில் மூன்று நீர்த்தேக்கங்களில் மட்டுமே வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தனபால கூறினார்.
அதன்படி, மதுரு ஓயா, கண்டலம மற்றும் கலா வெவ நீர்த்தேக்கங்கள் தற்போது தண்ணீரை வெளியேற்றி வருகின்றன.
மேலும் இந்த நீர் வெளியேற்றங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று இயக்குனர் மேலும் உறுதியளித்தார்.
விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் அவ்வப்போது திறக்கப்படுவதாகவும் நிலந்த தனபால குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
