பேரிடரை தொடர்ந்து இலங்கை வரும் இந்திய வெளியுறவு அமைச்சர்!
இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
2025 நவம்பர் 27 அன்று இலங்கையைத் தாக்கிய தித்வா சூறாவளிக்கு இந்தியாவின் விரைவான மற்றும் விரிவான மனிதாபிமான நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சூறாவளி கரையைக் கடந்த உடனேயே இந்தியா ஆபரேஷன் சாகர் பந்துவைத் தொடங்கியது, சிறப்பு பேரிடர் மீட்புப் படையினரை அனுப்பிய முதல் நாடாக இந்தியாவே காணப்பட்டது.
சில மணி நேரங்களுக்குள், விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் உட்பட, கடற்படை மறுஆய்வுக்காக கொழும்பில் ஏற்கனவே உள்ள இந்திய கடற்படைக் கப்பல்கள் ஆரம்ப நிவாரணப் பொருட்களை வழங்கின.
அடுத்தடுத்த நாட்களில், கூடாரங்கள், போர்வைகள், சுகாதாரப் பெட்டிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இந்தியா நன்கொடையாக வழங்கியிருந்தது.
அத்துடன் தேசிய பேரிடர் மீட்புப் படையின் உயர்மட்டக் குழுக்கள் அனுப்பப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
