பிரித்தானியாவில் 9 வயது சிறுமி குத்திக் கொலை - 15 வயது சிறுவன் கைது
#Arrest
#Murder
#children
#England
Prasu
17 hours ago
பிரித்தானியாவின் வெஸ்டன்-சூப்பர்-மேயர் பகுதியில் கத்தியால் குத்தி ஒன்பது வயது சிறுமி ஆரியா தோப் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, அவர் பிரிஸ்டல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். எதிர்வரும் ஜூன் மாதம் இதற்கான வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஆரியா “மகிழ்ச்சியும் ஒளியும் நிறைந்த ஒரு தேவதை” என்றும் அவளது இழப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையை அளித்துள்ளதாகவும் அவளது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )