பொது இடத்தில் எச்சில் உமிழ்ந்த மூவருக்கு 7000/= ரூபா தண்டம்
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு சந்தையில் மக்கள் நடமாடும் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்த மூவருக்கு 7000 தண்டம் விதிக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு சந்தையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் உமிழ்ந்த மீன் வியாபரி மற்றும் பொது மக்கள் இருவருக்கு புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகரால் இன்று வெள்ளி கிழமை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்குகள் இன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன் போது உரிமையாளர்களை குற்றவாளியாக இனங்கண்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் 7000/= ரூபா தண்டம் விதித்தது.
இதில் மீன் வியாபாரம் செய்த ஒருவருக்கு 5000 ரூபாயும் மற்றவர்களுக்கு தலா 1000 படி மொத்தமாக 7000/= தண்டம் விதித்ததுடன் இனி வரும் காலங்களில் இவ்வாறு குற்றம் இளைக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட காலம் சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் எச்சரிக்கை வழங்கபட்டது.
(வீடியோ இங்கே )