இரணைமடு உள்ளிட்ட நான்கு குளங்களின் வான்கதவுகள் திறப்பு!
#SriLanka
#weather
#water
#Rain
Mayoorikka
13 hours ago
மழை காரணமாக விக்டோரியா, ரந்தனிகல, இரணைமடு மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகளும், ரந்தனிகல மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்களின் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்னேரியா நீர்த்தேக்கத்தில் ஆறு அங்குல அளவுக்கு ஐந்து வான்கதவுகளும், ஒரு அடி அளவுக்கு ஒரு வான்கதவும் திறக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
அகலவான் கால்வாய் வழியாக கவுடுலு ஏரியில் வினாடிக்கு ஆயிரம் கன அடி கொள்ளளவு நீர் திறந்துவிடப்படுகிறது.
இதன் காரணமாக, அகலவான் கால்வாயின் இருபுறமும் உள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
