வைரலான காணொளி - குளியாப்பிட்டி காவல் நிலைய குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி இடமாற்றம்!

#SriLanka #Police #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
18 hours ago
வைரலான காணொளி - குளியாப்பிட்டி காவல் நிலைய குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி இடமாற்றம்!

குளியாப்பிட்டி காவல் நிலைய குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி (OIC)  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

நபர் ஒருவர் தடியால் தாக்கப்படுவதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருந்தது. 

இது தொடர்பான விசாரணையில்  தாக்குதலை நடத்திய நபர் குளியாப்பிட்டி காவல் நிலைய குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி என்பது தெரியவந்துள்ளது. 

 இதன் விளைவாக, வடமேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த துணைப் பொலிஸ் மா அதிபரின் (DIG) நேரடி மேற்பார்வையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

 சம்பந்தப்பட்ட அதிகாரி குளியாப்பிட்டி காவல் நிலையத்திலிருந்து மாவதகம காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணை முடிந்ததும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!