சாய்பாபாவுக்கு நிரந்தர பாதுகாப்பு வேண்டும்: போதைவஸ்து கும்பலால் அபாயம்
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை சாவல்கட்டு கிராமத்தில் போதைப் பொருள் வியாபாரிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சாய் பாபா ஆலயத்தை நடத்தி வரும் சாய் கிரிசாந் ஐயாரின் வீட்டிற்குள், நேற்று (16.12.2025செவ்வாய்க்கிழமை) போதைப் பொருள் வியாபாரிகளான தங்கமயில் தலக்சன், கோபினாத் நதிசன் ஆகியோர் வீடு புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம், சாய் கிரிசாந் ஐயாரின் வீட்டிற்குள் புகுந்த போதைப் பொருள் வியாபாரிகள், வீட்டு கதவுகள் மற்றும் கண்ணாடிகளை உடைத்ததுடன், ஐயாரை வாள்கள் மற்றும் கட்டைகளால் தாக்க முயன்றுள்ளனர்.
உயிர் ஆபத்தை உணர்ந்த ஐயார் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வீதிக்கு வந்துள்ளார். அப்போது பொதுமக்கள் கூடிவந்ததை கண்ட போதைப் பொருள் வியாபாரிகள், வாள்களை மறைத்து வைத்து, மீண்டும் கட்டைகளால் ஐயாரை தாக்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, சாய் கிரிசாந் ஐயார் உடனடியாக தொலைபேசி மூலம் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோதும், தாக்குதல் நடத்திய போதைப் பொருள் வியாபாரிகளை கைது செய்யாமல், ஐயாரை காவல் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.
ஒரு இந்துமத ஆலய பூசாரி, ஒரு மதத் தலைவர், வெளிப்படையாக தாக்கப்பட முயன்ற நிலையிலும், போலீசார் உரிய பாதுகாப்போ, சட்ட நடவடிக்கையோ எடுக்காதது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
இலங்கை நாட்டில் இந்து மத பூசாரிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் இதுதானா பாதுகாப்பு?
போதைப் பொருள் வியாபாரிகளுக்கு ஆதரவாக சட்டம் செயல்படுகிறதா? இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணை, குற்றவாளிகளை கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை, மேலும் சாய் பாபா ஆலயத்திற்கும் பூசாரிக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
(பிரதி முகநூல்)
(வீடியோ இங்கே )
அனுசரணை
