நாட்டை கட்டியெழுப்ப 7.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் சர்வதேச இடப்பெயர்வு அமைப்பு!
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட மக்களை ஆதரிப்பதற்காக சர்வதேச இடப்பெயர்வு அமைப்பு (IOM) 7.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது.
குறித்த புயல் நிலை காரணமாக 280,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், ஏறக்குறைய 84 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
“ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் பின்னால் ஒரு நபரின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் உரிமைகளுக்கு வழிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது.
இது போன்ற தருணங்களில், மக்கள் பாதுகாக்கப்பட்டதாகவும், ஆதரிக்கப்பட்டதாகவும், நிலைத்தன்மையை மீண்டும் பெறக்கூடியதாகவும் உணர வேண்டும்,” என்று இலங்கையில் உள்ள IOM இன் தலைமைத் தூதர் கிறிஸ்டின் பார்கோ கூறினார்.
இந்த வேண்டுகோள் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் சமூகங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வழிகளில் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் அரசாங்கத்தின் தலைமையிலான முயற்சிகளுடன் இணைந்து செயல்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
