இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5% க்கும் அதிகமாக வளர்ச்சியடையும்!
இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5% க்கும் அதிகமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்த ஆண்டின் வேகத்திற்கு இணையாகவும், IMF கணிப்புகளை கணிசமாக விஞ்சும் என்றும் அமைச்சர் ஒருவர் ரொய்டர்ஸ் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
22 மில்லியன் மக்கள் தொகையில் ஏறக்குறைய 10 சதவீதமானோர் டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மறுக்கட்டமைப்பு பணிகளுக்காக சுமார் 07 பில்லியன் டொலர் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம், ஆசிய வளர்ச்சி வங்கி நாட்டிற்கு 200 மில்லியன் டொலர்களையும், உலக வங்கி 120 மில்லியன் டொலர்களையும் வழங்க உறுதியளித்தன. இலங்கையின் 200 மில்லியன் டொலர் அவசர நிதிக்கான கோரிக்கையை IMF வெள்ளிக்கிழமை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“எனவே, விரைவான பதில், நிறுவனங்களின் ஆதரவு மற்றும் தற்போதுள்ள வளர்ச்சித் திட்டங்களுடன் அடுத்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
