கல் குவாரிகளில் மீண்டும் புவியியல் ஆய்வை மேற்கொள்ள நடவடிக்கை!

#SriLanka
Mayoorikka
1 day ago
கல் குவாரிகளில் மீண்டும் புவியியல் ஆய்வை மேற்கொள்ள நடவடிக்கை!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இயங்கும் 262 கல் குவாரிகளில் மீண்டும் புவியியல் ஆய்வை மேற்கொள்ள சுரங்கப் பணியகம் திட்டமிட்டுள்ளது.

 மேலும் மண்சரிவு அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்படும் குவாரிகளுக்கான சுரங்க உரிமங்களும் உடனடியாக இடை நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுவரை, மண்சரிவால் பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்டத்தில் உள்ள இரண்டு குவாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

 மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் குவாரிகளில், 127 குவாரிகள் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், 135 குவாரிகள் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அமைந்துள்ளன.

 மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மண்சரிவு ஆபத்துக்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!