அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா?
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் கோரியுள்ளது.
2 நாட்களுக்குள் எழுத்துமூலம் பதில் வழங்குமாறு காலக்கெடு குறித்து கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த புதன்கிழமை மாணவன் ஒருவர் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவுக்கு வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீடு புறக்கணிக்கப்பட்டு விட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம், "அரசாங்கத்தின் 25,000 ரூபா நிவாரணத் தொகை வீட்டுக்கானதா அல்லது தனி நபருக்கானதா" என்ற விளக்கத்தை இரு நாட்களுக்குள் எழுத்து மூலம் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சண்டிப்பாய் பிரதேச செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளது.
(வீடியோ இங்கே )