பேரழிவால் சிலாபம் வைத்தியசாலையில் 1,200 மில்லியன் சேதம்!
சிலாபம் பொது மருத்துவமனையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் .1,200 மில்லியன் பொருட் சேதம் ஏறப்ட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று (12) மருத்துவமனைக்கு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார், வழக்கமான சிகிச்சை சேவைகளை முழுமையாக மீட்டெடுக்க இதே போன்ற தொகை தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கட்டுமானத்தில் உள்ள புதிய வார்டு வளாகத்தையும் ஆய்வு செய்த அவர், அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடையும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவின் கட்டுமானப் பணிகள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று அவர் மேலும் கூறினார்.
கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தவும், மருத்துவமனையை அதன் முந்தைய நிலையை விட உயர்ந்த தரத்திற்கு மீண்டும் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
