பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் விடுத்துள்ள கோரிக்கை!
பேரிடர்களுக்கு இலக்காகியுள்ள மற்றும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் உள்ள குழந்தைகள் பற்றிய தகவல்களைப் சமூக ஊடகங்களில் பரப்புவதைத் தவிர்க்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பில் இன்று அறிக்யொன்றை வெளியிட்டுள்ள அமைச்சகம், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளிக்ள மற்றும் தகவல்களை சமூக ஊடகங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்களில் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
அவ்வாறு செய்வது குழந்தைகளின் அடையாளம் மற்றும் தனியுரிமையை சேதப்படுத்தும் என்றும், புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அவர்களை தவறாகப் பயன்படுத்தும் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் செல்ல வழிவகுக்கும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
குழந்தைகள் சுரண்டப்பட்டு கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறிய அமைச்சகம், அந்த நபர்கள் மீது அமைச்சகம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் அல்லது அத்தகைய கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால், 1929 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
