இலங்கையர்கள் உள்பட 18 பேரை கைது செய்த ஈரான்! கப்பல் ஒன்றும் சுற்றிவளைப்பு!
#India
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 days ago
ஓமன் வளைக்குடாவில் பயணித்த எரிபொருள் டேங்கர் கப்பலை நேற்று ஈரானிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கப்பலில் இலங்கையர்கள் உட்பட 18 பேர் பயணித்ததாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
6 மில்லியன் லிட்டர் எரிபொருளை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நிறுத்த உத்தரவுகளை புறக்கணித்தல், தப்பிச் செல்ல முயன்றது மற்றும் கப்பலின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
