36 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு!
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 36 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 46 நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.
அதன்படி மாவட்ட ரீதியாக வான் பாயும் நீர்த்தேக்கங்களின் விபரம் பின்வருமாறு, அநுராதபுரத்தில் அனைத்துப் பிரதான நீர்த்தேக்கங்களும் வான் பாய்கின்றன. அம்பாறையில் உள்ள 9 நீர்த்தேக்கங்களில் 3 வான் பாய்கின்றன.
பதுளையில் உள்ள 7 நீர்த்தேக்கங்களில் 3 வான் பாய்கின்றன. மட்டக்களப்பில் உள்ள 4 நீர்த்தேக்கங்களில் 3 வான் பாய்கின்றன.
ஹம்பாந்தோட்டையில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் 4 வான் பாய்கின்றன. குருநாகலில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் 4 வான் பாய்கின்றன.
கண்டியில் உள்ள 3 நீர்த்தேக்கங்களில் 2 வான் பாய்கின்றன. திருகோணமலையில் உள்ள 5 நீர்த்தேக்கங்களில் 3 வான் பாய்கின்றன. பொலன்னறுவையில் உள்ள 4 நீர்த்தேக்கங்களில் 2 வான் பாய்கின்றன.
மொனராகலையில் உள்ள 3 நீர்த்தேக்கங்களில் 1 வான் பாய்கிறது. மன்னாறில் உள்ள 4 நீர்த்தேக்கங்களில் 1 வான் பாய்கிறது. மேலும், நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறப்பதன் மூலம் தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தபட்ச மட்டத்திலேயே காணப்படுகிறது.
எனினும், எதிர்காலத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப வான் கதவுகளைத் திறக்கும் அளவு மாறுபடலாம்.
தற்போது வெள்ள அபாயமோ நீர் மட்ட உயர்வோ இல்லை என்றாலும், தாழ்நிலப் பகுதி மக்கள் நீர் வெளியேற்ற அறிவிப்புகளை தீவிரமாக அவதானிக்க வேண்டும் எனவும் பணிப்பாளர் வலியுறுத்தி உள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
