தென்னிலங்கையில் விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் - 22 பேர் கைது!

#SriLanka #Arrest
Thamilini
1 day ago
தென்னிலங்கையில் விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் - 22 பேர் கைது!

தென்னிலங்கையில் இடம்பெற்ற முகப்புத்தக விருந்தில் பங்கேற்ற 22 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களில் நான்கு பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் இந்த நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற 22 பேர் இன்று காலை (13.12) கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் 4134 மில்லிகிராம் ஐஸ், 1875 மில்லிகிராம் ஹாஷ், 2769 மில்லிகிராம் குஷ், 390 மில்லிகிராம் கோகைன், 804 மில்லிகிராம் காளான், 13 மாத்திரைகள் மற்றும் 12 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

கண்டி, முல்லேரியாவ, ஹட்டன், பிலகல, அதுருகிரிய, கொட்டகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டி, திருகோணமலை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 -31 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!