யாழில் வெடித்த போராட்டம் சிக்கலில் இந்தியா (வீடியோ இணைப்பு)

#SriLanka
Mayoorikka
2 hours ago
யாழில் வெடித்த போராட்டம் சிக்கலில் இந்தியா (வீடியோ இணைப்பு)

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளும் மீன்பிடி மற்றும் உள்ளூரில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளையும் தடுத்து நிறுத்த நீரியல்வளத் திணைக்களம், நீரியல் , மீன்பிடி அமைச்சர் , ஜனாதிபதி ஆகியோர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நாளை இடம்பெறவுள்ள மீனவர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு, கடற்றொழிலாளர்கள் அனைவரையும் பங்கேற்குமாறும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் வலியுறுத்தியுள்ளது. வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் தம்பிராசா சந்திரதாஸ் நேற்று (11) நண்பகல் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.


 கடந்த ஒரு மாதகாலமாக இந்திய மீனவர்களது இழுவைப் படகுகள் எல்லை தாண்டி வடமராட்சி கிழக்குத் தொடக்கம் மன்னார் வரை சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் உள்நாட்டிலும் இழுவைப் படகை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளும் தொடர்சியாக இடம்பெற்று வருகிறது.

 மேற்குறித்த சட்டவிரோத நடவடிக்கைகளை உடன் தடுத்து நிறுத்துமாறு கோரி   யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி பேரணியாக யாழ் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து மாவட்டச் செயலக செயற்பாடுகளை முடக்கப் போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் சம்மேளனம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

 குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் தம்பிராசா சந்திரதாஸ் குறித்த போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!