வெளிநாட்டு வேலை வாய்ப்பு பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!
#SriLanka
Mayoorikka
2 hours ago
அத்துருகிரிய - கஜபா மாவத்தை பகுதியில், வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக கூறி, பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துருகிரிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, வியாழக்கிழமை (11) மாலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வாதுவை பகுதியைச் சேர்ந்த, 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பண மோசடிகள் தொடர்பாக, மொரட்டுவை, காலி, வரக்காப்பொல மற்றும் பாணந்துறை ஆகிய நீதிமன்றங்களால், குறித்த சந்தேகநபருக்கு எதிராக 88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அத்துருகிரிய பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
