நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் முயற்சியில் இறங்கிய ஐ.நா!
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான இலங்கையின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை இன்று (11) தனது மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட ஐக்கிய நாடுகள் சபை உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து முயற்சித்து வருவதாக இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (11.12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு அரசாங்கம் தலைமை தாங்குவதாகவும், ஐ.நா. மற்றும் பிற உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகள் பல பகுதிகளில் தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்கிய ஆதரவுடன் இந்த முயற்சிக்காக ஐ.நா. ஏற்கனவே 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
